search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை அமைக்க வேண்டும் - காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு வலியுறுத்தல்
    X

    திருச்சியில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை அமைக்க வேண்டும் - காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு வலியுறுத்தல்

    • திருச்சி மாவட்ட காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடை பெற்றது
    • வருகிற 7, 8, 9 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் பாதயாத்திரை செல்லும் வருங்கால பிரதமர் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் திருச்சியில் இருந்து பத்து வேன்களில் வக்கீல்கள் கலந்து கொள்ள வேண்டும்.

    திருச்சி,

    திருச்சி மாவட்ட காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் திருச்சி மாவட்ட நீதிமன்றம் எதிரில் உள்ள காங்கிரஸ் வக்கீல்கள் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மூத்த வக்கீல்கள் ராஜேந்திரன், லட்சுமணன், பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார், முருகையா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுசெயலாளர் வக்கீல் எம் .சரவணன், செயலாளர் இளங்கோ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    வருகிற 7, 8, 9 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் பாதயாத்திரை செல்லும் வருங்கால பிரதமர் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் திருச்சியில் இருந்து பத்து வேன்களில் வக்கீல்கள் கலந்து கொள்ள வேண்டும்.

    தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் சிக்கல் சண்முகம், ரமணன், சுந்தரவடிவு, ஆறுமுகம், அஸ்வின்குமார், அசோக்குமார், நாதனியல் தாஸ், ஜீஜிஷ், டேனியல், மோகன்ராமேஷ் பிரபு, சுப்பிரமணி, கோகுல் பூர்ணலிங்கம், திலீபன், விக்னேஷ், சுகன்யா, சிவகாமி, சுவெதா, பவித்ரா மற்றும் ஏராளமான காங்கிரஸ் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் விக்னேஷ் நன்றி கூறினார்.

    Next Story
    ×