என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமியை திருமணம் செய்த வாலிபர்
- சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்
- 8-ம் வகுப்பு படித்து வருகிறார்
திருச்சி
திருச்சியில் சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொடர்பு வைத்து, வீட்டருகே விட்டு விட்டு ஓட்டம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பமான சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்த போலீசார் வாலிபரை தேடி வருகின்றனர்.
திருச்சி மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். துாய்மை பணியாளரான இவர், தனது உறவினரான 8-ம் வகுப்பு படிக்கும், 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அழைத்துசென்று மணப்பாறையில் அவரை திருமணம் செய்து பாலியல் உறவு கொண்டுள்ளார்.
இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர்கள், மகளை திருப்பி அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அதற்கு ஆனந்த் மறுத்துள்ளார்.
உடனே சிறுமியின் பெற்றோர், இது குறித்து திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனை அறிந்த ஆனந்த், சிறுமியை அழைத்து வந்து, வீட்டருகே விட்டு விட்டு ஓடி விட்டார். இந்நிலையில் சிறுமிக்கு கடும் உடல் உபாதை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமடைந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து ஆனந்தை தேடி வருகின்றனர்.