என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பெயிண்டர் தற்கொலை
Byமாலை மலர்26 Sept 2023 12:38 PM IST
- பெயிண்டர் தற்கொலை
- திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பெயிண்டர் தற்கொலை
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ராமர் . இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 35). பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி (29) என்ற பெண்ணுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் இருவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளனர். இந்நிலையில் பாலகிருஷ்ணன், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்படிபுதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடந்தி வருகிறார்கள்.
Next Story
×
X