search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி காவேரி மகளிர் கல்லூரி சார்பில் சமூகபிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்
    X

    திருச்சி காவேரி மகளிர் கல்லூரி சார்பில் சமூகபிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்

    • உளவியல் ஆலோசகர் கே.அகிலா துரித உணவுகள் மற்றும் அதனால் ஏற்படும் தீங்குகள் பற்றி எடுத்துரைத்தார்.
    • பிடாரம்பட்டி காலனியில் இயற்கை காட்சி எனும் தலைப்பில் ஓவிய போட்டி நடத்தப்பட்டது.

    திருச்சி,

    திருச்சி காவேரி மகளிர் கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி சமூக பணித்துறை சார்பில் குன்னத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் சமூகப் பிரச்சினைகள் மற்றும் விழிப்புணர்வு என்ற தலைப்பில் கிராமிய முகாம் நடைபெற்றது. துறையின் தலைவர் பேராசிரியர் மெட்டில்டா ஜி.புவனேஸ்வரி தொடக்க உரை நிகழ்த்தினார்.

    நிகழ்ச்சிக்கு குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் எம்.செந்தில் குமார் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாணவிகள் தொடர்பு தலைவர் ஜி.கனகா, மனிதவள மேலாளர் கே.லாரன்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் என்ற தலைப்பில் உளவியல் ஆலோசகர் கே.அகிலா கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது துரித உணவுகள் மற்றும் அதனால் ஏற்படும் தீங்குகள் பற்றி எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து ஆசிஷ் பிரைநாட் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகளை விளக்கிப் பேசினார். இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் வாசன் ஐகேர் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். மேலும் கல்வி மற்றும மனநல ஆரோக்கியம் குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அதன் பின்னர் மூன்றாவது நாள் குன்னத்தூர் ஊராட்சி கீழ்பண்ணையில் 100 நாள் வேலைத்திட்ட மக்களுக்கு புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பிடாரம்பட்டி காலனியில் இயற்கை காட்சி எனும் தலைப்பில் ஓவிய போட்டி நடத்தப்பட்டது.

    கோலார்பட்டியில் கல்வியின் முக்கியத்துவத்தை துறையின் உதவி பேராசிரியர் எஸ்.வித்யா ராபின்சன் ஆகியோர் எடுத்துக் கூறினர். மேலும் அடுத்தடுத்த நான்கு நாட்கள் ஆண், பெண் சமத்துவம், வளர் இளம் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு காய்கறி விதைகள் கொடுத்து தோட்டம் அமைப்பது, சட்ட விழிப்புணர்வு சுற்றுச்சூழல் மற்றும் கழிப்பறை சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    இந்த கிராமிய முகாம் தொடர்ச்சியாக 7 நாட்கள் குன்னத்தூர் பஞ்சாயத்து பகுதியில் நடைபெற்றது.

    Next Story
    ×