search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி குழந்தைகளுக்கு புத்தகம் வழங்கும் விழா
    X

    பள்ளி குழந்தைகளுக்கு புத்தகம் வழங்கும் விழா

    • பள்ளி குழந்தைகளுக்கு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.
    • சௌராஷ்ட்ரா இளைஞர் சேவா சங்கம் சார்பில் நடைபெற்றது

    திருச்சி:

    திருச்சி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம், திருச்சி ஸ்ரீமந் நடன கோபால நாயகி ஸ்வாமிகள் சேவை அமைப்பு, திருச்சி சௌராஷ்ட்ரா இளைஞர் சேவா சங்கம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா, சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா, சௌராஷ்ட்ரா வரலாற்று நூலகம் திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா திருச்சி பெரிய சௌராஷ்டிரா தெருவில் நடந்தது .மகேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஹரிநாத் வரவேற்றார் . தஞ்சை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் விமூர்த்தானந்தர்மகராஜ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த விழாவில் தஞ்சை சௌராஷ்டிரா பெடரேசன் நிறுவனர் சுரேந்திரன், வக்கீல் சுதர்சன், சசிகுமார், ரமேஷ்பாபு, அம்சராம், வெங்கடேஷ், ஒருங்கிணைப்பாளர் யுவராஜ்,திருச்சி ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் சேவை அமைப்பு வினோத் கண்ணா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .முடிவில் பொருளாளர் அம்சாரம் நன்றி கூறினார்.

    Next Story
    ×