என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
செல்போன் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்15 Nov 2022 3:43 PM IST
- செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
- பயணிகள் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்
திருச்சி:
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் கவுதம் (வயது 41). இவர் இளையான்குடி செல்வதற்காக திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் இவரது பையில் இருந்த செல்போனை எடுத்து விட்டு தப்பி ஓடினார். அப்போது அந்த வாலிபரை கௌதம் மற்ற பயணிகள் உதவியுடன் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் திருவானைக்காவல் அழகிரிபுரம் செக்போஸ்ட் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது26) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது 13 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X