என் மலர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை கண்ணன் மறைவால்அறிவுலகம் ஆற்றாமையால் தவிக்கிறது - குணசீலம் ஊராட்சி மன்ற தலைவர் இரங்கல்
- மறைந்த நெல்லை கண்ணன் மறைவுக்கு குணசீலம் ஊராட்சி மன்ற தலைவர் மரு. குருநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- கம்ப ராமாயணம் தொடங்கி எந்த இலக்கியமாக இருந்தாலும் ஆதி முதல் அந்தம் வரை முழுமையாக பேசும் புலமை கொண்டவர் நெல்லை கண்ணன்
திருச்சி :
நெல்லை தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. மறைந்த நெல்லை கண்ணன் மறைவுக்கு குணசீலம் ஊராட்சி மன்ற தலைவர் மரு. குருநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கவிதை வடிவிலான அவரது இரங்கல் செய்தியில், மிகச் சிறந்த தமிழ் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன், மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த அயராது பணியாற்றியவர். தனது பேச்சாற்றலுக்காகவும், தமிழ் மீதான பற்றுக்காகவும் வாழும் நாள்களிலேயே அறிஞர்கள் பலரால் அவர் தமிழ்கடல் என்று போற்றப்பட்டவர்.
கம்ப ராமாயணம் தொடங்கி எந்த இலக்கியமாக இருந்தாலும் ஆதி முதல் அந்தம் வரை முழுமையாக பேசும் புலமை கொண்ட நெல்லை கண்ணன், அரசில் ரீதியாகவும் கொள்கை துணிவு கொண்ட பேச்சாளராவார். எல்லா இலக்கியங்களையும் நெஞ்சில் எழுதி தனது நா வன்மையால் சமகால சமூகத்துக்கு தமிழ் உணர்வை ஊட்டிக் கொண்டே இருந்தவர்.
எண்ணிலடங்கா தமிழ் கவிதை, காவியம், அறிவரங்கம், தமிழ்மாக்கடலின் மறைவு அறிவுலகம் ஆற்றாமையால் தவிக்கிறதே. இனி ஒரு கண்ணன் அய்யா எங்கே கிடைப்பார் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.