search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாபர் மசூதி இடிப்பு தினத்தில் த.மு.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
    X

    பாபர் மசூதி இடிப்பு தினத்தில் த.மு.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

    • ஆர்ப்பாட்டம் திருச்சி மரக்கடை அருகே நடைபெற்றது
    • பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு அது சொந்தம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    திருச்சி:

    கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், இனி ஒரு பள்ளிவாசலை இடிக்க அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி மாவட்டம் சார்பில் வழிபாட்டு உரிமைக்கான பாதுகாப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் திருச்சி மரக்கடை அருகே நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமை தாங்கினார். திருச்சி மேற்கு மாவட்ட த.மு.மு.க. தலைவரும், கவுன்சிலருமான பைஸ்அகமது வரவேற்றார்.

    த.மு.மு.க. தலைமை பிரதிநிதி கோவை சாதிக் அலி, திராவிட பேச்சாளர் நாஞ்சில் சம்பத், திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலாமா தலைவர் மௌலானா ரூஹீல் ஹக், த.மு.மு.க. மகளிர் பேரவை மாநில செயலாளர் ஷான் ராணி ஆலிமா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசும்போது, பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயற்சி மதச்சார்பற்ற நாடு என்பதே இந்தியாவின் பலம். ஆனால் பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு அது சொந்தம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயற்சிக்கி றார்கள். என். ஐ. ஏ. என்று ஒன்றை வைத்துக்கொண்டு பூச்சாண்டி காட்டி இஸ்லாமியர்களை அச்சத்திலும், பீதியிலும் ஆளாக்கி வருகிறார்கள். இஸ்லாமியர்களுக்கும் பயங்கரவாதத்திற்கும் சம்பந்தமில்லை. இஸ்லாமும் அதை சொல்லவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாவட்ட செயலாளர்கள் எஸ்.இப்ராஹிம்ஷா, என்.இலியாஸ்,

    மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்கள் ஏ.இப்ராஹிம், ஏ.அஷ்ரப் அலி, மாவட்ட பொருளாளர்கள் எம்.ஹூமாயூன், என்.காஜா மொய்தீன், மாவட்ட துணை தலைவர் அக்பர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×