என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![துறையூரில் புதிய உணவுப்பொருட்கள் அறிமுக விழா துறையூரில் புதிய உணவுப்பொருட்கள் அறிமுக விழா](https://media.maalaimalar.com/h-upload/2022/08/07/1742583-srinivasanphoto.jpg)
துறையூரில் புதிய உணவுப்பொருட்கள் அறிமுக விழா
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- திருச்சி மாவட்டம் துறையூரில் நாளை ஏற்றுமதி நிறுவனத்தின் புதிய உணவு பொருட்கள் அறிமுக விழா நடைபெற உள்ளது
- பனானா பால் மிக்ஸ், பாதாம் பால் மிக்ஸ்,கேரட் பால் மிக்ஸ், பீட்ரூட் பால் மிக்ஸ், மசாலா பால் மிக்ஸ் போன்ற புதிய உணவு வகைகள் அறிமுகம் செய்யப்படுகிறது
திருச்சி:
எஸ்.எம். எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் புதிய உணவுப் பொருட்கள் அறிமுக விழா நாளை (8-ந்தேதி, திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு துறையூர் ரோட்டரி சங்கத்தில் நடக்கிறது. இதில் பனானா பால் மிக்ஸ், பாதாம் பால் மிக்ஸ்,கேரட் பால் மிக்ஸ், பீட்ரூட் பால் மிக்ஸ், மசாலா பால் மிக்ஸ் போன்ற புதிய உணவு வகைகள் அறிமுகம் செய்யப்படுகிறது.
இதனை திருச்சி மாவட்ட ரோட்டரி பப்ளிக் இமேஜ் டிஸ்பிளே சேர்மன் டாக்டர் கே.சீனிவாசன் வெளியிடுகிறார்.
அந்த புதிய பொருட்களை துறையூர் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஆர்.கலியமூர்த்தி, முன்னாள் தலைவர் வி.ஸ்ரீதர், செயலாளர் என்.தில்லைநாயகம், பொருளாளர் ஏ.துரைராஜ்,
துணை ஆளுநர் கே.மணிகண்டன், துறையூர் கோல்டன் ரோட்டரி சங்கத்தின் மண்டல செயலாளர் (நிர்வாகம்) எஸ்.அசோக் பெரியசாமி ஆகியோர் அதனை பெற்றுக் கொள்கிறார்கள்.
இதில் துறையூர் ஷாலம் பவுண்டேஷன் கே.கே.மாரிமுத்து, எம்.தமிழ்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
முடிவில் திருச்சி ரோட்டரி சங்கத்தின் நிர்வாகி எம்.மஞ்சு நன்றி கூறுகிறார்.