என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகையநல்லூர் ஏரியில் நீர்க்கசிவை உடனே சரிசெய்த விவசாயிகள்
- நாகையநல்லூர் ஏரியில் நீர்க்கசிவை விவசாயிகள் உடனே சரிசெய்தனர்
- தியாகராஜன் எம்.எல்.ஏ. உத்தரவின்பேரில் நடவடிக்கை
திருச்சி:
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டத்தில் மிகப்பெரிய ஏரியான நாகையநல்லூர் ஏரி சுமார் 452 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் மூலமாக நஞ்சை ஆயிரம் ஏக்கருக்கும் மேலாகவும், புஞ்சை 4000 ஏக்கருக்கு மேலாகவும் பாசன வசதி பெறுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த ஏரியின் சுற்றளவில் உள்ள 20 கி.மீ. அளவுக்கு மேல் நிலத்தடி நீர் மேலோங்கி 800-க்கும் மேற்பட்ட கிணறுகளில் நீர் சேர்ந்து வறட்சி காலத்தில் விவசாயத்துக்கு பயன்படும்.
இந்த பெரிய ஏரிக்கு தற்பொழுது கொல்லிமலையில் பெய்த மழையின் காரணமாக நீர் வரத்து அதிகாமி தற்பொழுது நிரம்பும் தருவாயில் உள்ளது. இதில் இரண்டு மதவுகள் உள்ளன. அவை நாகையநல்லூர் குமுளிகரையிலும், பெரிய நாச்சிப்பட்டியிலும் உள்ளது, நாகையநல்லூர் குமுளிக்கரையில் நீர்க்கசிவு ஏற்பட்டதால் அதை உடன் சரி செய்ய முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளமான காடுவெட்டி ந.தியாகராஜன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் திருச்சி மாவட்ட செயற்பொறியாளர் நித்தியானந்தம், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தீவிர பணி மேற்கொண்டு எந்திரங்கள் மற்றும் மோட்டார்களை கொண்டு குமுளிக்கரையில் நீர்க்கசிவை தடுத்து வருகின்றார்கள். மேலும் ஏரி நிரம்பினால் ஏரி நீர் குடியிருப்பு பகுதிகளிலோ அல்லது விவசாய பகுதிகளை பாதிக்காத வண்ணம் நீரை காவேரியில் கலக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பணியில் தி.மு.க. தொட்டியம் மேற்கு ஒன்றிய செயலாளர் பி.தங்கவேல் மற்றும் நிர்வாகிகள், நாகையநல்லூர் பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.