என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்
- ஓய்வு பெற்ற பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
- கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்
திருச்சி,
திருச்சி உய்யக் கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ் சுந்தரம். இவரது மனைவி பாத்திமா ரோஸ்லி ராஜு (வயது 72). இவர் திருச்சி யூனியன் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.இவரிடம் திருச்சி வயலூர் ரோடு குமரன் நகரை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் தனது மளிகை கடையை மேம்படுத்த ரூ. 12 லட்சம் பணம் கடன் வாங்கி உள்ளார். அதன் பிறகு பாத்திமா அந்த பணத்தை திருப்பி கேட்டதற்கு தராமல் இழுத்தடித்து வந்தார். பின்னர் சமீபத்தில் ஜெய்சங்கர் ரூ 3லட்சத்து 15 ஆயிரம் பணத்தை திரும்பி கொடுத்துவிட்டார். மீதிபணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். மேலும் கடன் தொகையை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்த ஜெய்சங்கர் பாத்திமா வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது இது குறித்து பாத்திமா திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில்திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் ஜெய்சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.