search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொட்டியம் அருகே அத்தனூர் அம்மன் கோவில் பாலஸ்தாபன விழா
    X

    தொட்டியம் அருகே அத்தனூர் அம்மன் கோவில் பாலஸ்தாபன விழா

    • தொட்டியம் அருகே அத்தனூர் அம்மன் கோவில் பாலஸ்தாபன விழா நடைபெற்றது
    • அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

    தொட்டியம்,

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் காந்தி நகரில் உள்ள ஸ்ரீ அத்தனூர் அம்மனுக்கு கும்பாபிஷேக விழா செய்வதற்காக ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் முடிவெடுத்தனர். இதையடுத்து அதற்கான கோபுர பாலஸ்தாபன விழா நடைபெற்றது. இதில் விநாயகர் வழிபாடு, புண்ணிய யாகம், வாஸ்து பூஜை, கோபுர பாலஸ்தானம் ஹோமங்கள், கோபுர மூலஸ்தான கலாகர்ஷன பூஜை உள்பட பல்வேறு யாகசாலை பூஜைகளை சிவாச்சாரியார்கள் சிறப்பாக செய்தனர். தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்றது. பின்பு அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காந்தி நகர், தலை கிராமங்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    Next Story
    ×