என் மலர்
உள்ளூர் செய்திகள்
கொட்டும் மழையில் ஜல்லிகட்டு
- களமாடிய காளைகளால் அதிர்ந்த காளையர்கள்
- பொத்தமேட்டுபட்டியில் கோலாகலம்
மணப்பாறை,
தை மாதம் பிறந்ததில் இருந்து தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் தினந் தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டி வரு–கிறது. இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கியது. இதைய–டுத்து மதுரை அவனியா–புரம், பாலமேடு, அலங்கா–நல்லூரில் நடைபெற்றது.திருச்சி மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு பெரிய சூரியூரில் 16-ந்தேதி நடை–பெற்றது. இதைய–டுத்து மணப்பாறை அருகே கருங்குளம், ஆவாரங்காட் டில் நடந்த போட்டியில் பங்கேற்ற காளைகள் தங்களது வளர்ப்பை கம்பீ–ரத்துடன் காட்டி மிரட்டி–யது. நாங்களும் சளைத்த–வர்கள் அல்ல, என்பதை மெய்ப்பிக்கும் வகையில் காளையர்களும் திமில்களை பிடித்து அடக்கி ஆண்டனர்.அதன் தொடர்ச்சியாக மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் புனித வியாகுல மாதா திடலில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் 750 காளைகள், 300 மாடு–பிடி வீரர்கள் கலந்து– கொண் டனர்.இதனை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் செவலூர் சின்னாக்கவுண்டர் காளை அவிழ்த்து விடப்பட்டதை தொடர்ந்து கோவில் களை–கள் மற்றும் உள்ளூர் காளைகள் அடுத்தடுத்து வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தது.அதன் பின்னர் திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, அரியலூர், கரூர் என பல் வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப் பட்ட காளைகள் கொட்டும் மழையிலும் கோலாகாலமாக அவிழ்த்து விடப்பட்டது. உற்சாகத்துடனும், வீரத்து–டனும் களமாடிய ஒருசில காளைகள், தங்களை பிடிக்க வந்த காளையர்களை மிரட் டியது.இதில் தன்னை அடக்க வந்த வீரர்களை காளை–கள் ஆக்ரோசமாக தூக்கி வீசுவதும், அதை வீரர்கள் துணிந்து பிடித்து அசத்து–வதுமாக மழை, குளிரிலும் ஜல்லிக்கட்டு களத்தில் அனல் பறந்தது. வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர் களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.