search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னிமாரம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா: வீரப்பூரில் இன்று மாலை பொன்னர் குதிரை தேரில் சென்று அம்பு போடும் வேடபரி நிகழ்ச்சி
    X

    கன்னிமாரம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா: வீரப்பூரில் இன்று மாலை பொன்னர் குதிரை தேரில் சென்று அம்பு போடும் வேடபரி நிகழ்ச்சி

    • வீரப்பூரில் இன்று மாலை பொன்னர் குதிரை தேரில் சென்று அம்பு போடும் வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது
    • மெய்சிலிர்க்க வைத்த படுகளம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்

    மணப்பாறை:

    மணப்பாறை அருகே வீரப்பூர் மாசிப் பெருந்திரு–விழாவின் முக்கிய நிகழ் வான வேடபரி என்னும் பொன்னர் குதிரை தேரில் அணியாப்பூர் சென்று அம்பு போடும் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. வீரப்பூர் கோவில் முன்பிருந்து பெரிய தேரில் அம்மன் பவனி நாளை மதியம் நடை–பெறுகிறது.

    வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில் மாசிப் பெருந் திருவிழாவை சிறப்பாக நடத்திட வீரப்பூர் கன்னி–மாரம்மன் கோவில்களின் பரம்பரை அறங்காவலர்க–ளும், வீரப்பூர் ஜமீன்தார்க–ளுமான ஆர்.பொன்னழ–கேசன், சௌந்தர–பாண்டி–யன், சுதாகர் என்ற சிவசுப்ர–மணிய ரெங்கராஜா, வீரப் பூர் கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை பூசாரிகளும்,

    வீ.பூசாரிபட்டி நான்கு கரை பட்டையதார்களுமான பெரியபூசாரி செல்வம், குதிரை பூசாரி மாரியப்பன், சின்னபூசாரி கிட்டு என்ற கிருஷ்ணசாமி, வேட்டை பூசாரி வீரமலை மற்றும் வீ.பூசாரிபட்டி ஊர் முக் கியஸ்தர்கள், பூசாரி–கள், சோம்பாசிகள், பரிசா–லங்கள், பட்டியூர் கிரா–மங்களின் ஊர் முக்கியஸ்தர் கள், கிராம மக்கள் திரு–விழாவிற்கான ஏற்பாடு–களை செய்து வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அண்ணன்மார் என்று அழைக்கப்படும் பொன் னர்-சங்கர் மாண்டு பின் மீண்டதாக கூறப்ப–டும் படுகளத்தில் படு–களம் சாய்தல், பின் எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று இரவு இந்த முக்கிய நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் குவிந்தி–ருக்க ஒவ்வொருவராக திடீர் திடீரெனவும், சிலர் சாமி ஆடியபடியும் வந்து கீழே சாய்ந்தனர். கீழே சாய்பவர்களை அங்கு இறை தொண்டாற்றும் ஊழியர்கள் தூக்கி வந்து கோவில் முன்பு வரிசையாக படுக்க வைத்தனர்.

    பலரும் இப்படி வரிசை–யாக படுக்க வைத்திருக்க யாரும் அசைவற்று அப்ப–டியே கிடந்தனர். இது அனை–வரையும் ஆச்சரியப்பட வைத்த மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. நேற்று நள்ளிரவில் கீழே விழுந்த–வர்கள் எல்லாம் இன்று அதிகாலை வரை சில மணி நேரம் அப்படியே இருந்தனர். அதன் பின்னர் அம்மன் பல்லக்கில் பவனி வரும் நிகழ்வு நடைபெற்றது.

    தொடர்ச்சியாக அலங்க–ரிக்கப்பட்ட அம்மன் மற் றும் தீர்த்தம் கோவில் வளாகத்தில் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்ற பின் பருவம் அடையாத சிறுமி ஒன்று திடீரென எழுந்து சாமியாடினார். அப்போது கோவில் பூசாரி–கள் தீர்த்தத்துடன் சென்று சிறுமியை அழைத்து வந்த பின் அந்த சிறுமி கீழ வரிசையாக படுத்தி–ருப்ப–வர்கள் மீது தீர்த்தத்தை தெளித்ததும் சில மணி நேரம் அசைவற்று கிடந்தவர்கள் துள்ளி எழுந்து விட்டனர்.

    இந்த வரலாற்று நிகழ்ச்சி தான் அண்ணன் மார் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி–யாகும். மிகவும் தத்ரூ–பமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி–யில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட–னர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை படுகளம் கோவில்களின் பரம்பரை அறங்காவலர்களும், பூசாரி–களுமான முனியப்பன் பூசாரி, கருப்பண்ணசாமி பூசாரி, வீரசங்கன் பூசாரி ஆகியோர் செய்திருந்தனர்.

    திருவிழாவையொட்டி திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், டி.ஐ.ஜி. சரவணசுந்தர் ஆலோசனையின் பேரில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் சுமார் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதே போல் பக்தர்களின் அடிப்படை தேவைகளை வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் மேற்பார்வையில் நல்லாம் பிள்ளை மற்றும் அணியாப் பூர் ஊராட்சிக–ளின் ஊராட்சி மன்றதலை–வர் கள், ஒன்றியக்குழு உறுப்பி––னர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் செய்துள்ள–னர். அவசர தேவைக்கு மருத்துவ முகாம் அமைக் கப்பட்டு மருத்துவக் குழு–வினர் தயார் நிலையில் உள் ளனர்.

    மேலும் சுகாதார துறையி–னர் மற்றும் வருவாய்து–றையினரும் பணியில் ஈடு–பட்டு உள்ளனர். பக்தர் களின் வசதிகாக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×