என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
திருச்சியில் லாரி மோதி தொழிலாளி சாவு
Byமாலை மலர்28 Oct 2023 2:33 PM IST
- இவர் பால்பண்ணை பகுதியில் உள்ள உயர்தர உணவகத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
- கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த லாரி அவரது வாகனத்தில் மோதியது
திருச்சி, காட்டூர் பாரதிதாசன் நகர் 10 வது தெருவைச் சேர்ந்தவர் வடிவேலன் (வயது45). இவர் பால்பண்ணை பகுதியில் உள்ள உயர்தர உணவகத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பாப்பாக்குறிச்சி பிரிவு சாலை பகுதியில் போலீசார் வைத்துள்ள இரும்பு தடுப்பை (பேரிகார்டு) கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த லாரி அவரது வாகனத்தில் மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார் அவரது சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
X