search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய நாடார் பேரவை சார்பில் மணமக்களுக்கு வாழ்த்து
    X

    இந்திய நாடார் பேரவை சார்பில் மணமக்களுக்கு வாழ்த்து

    • தூத்துக்குடி உமரிக்காட்டில் இந்திய நாடார் பேரவை தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது
    • திருச்சியில் இருந்து பேரவை தலைவர் ஜே.டி.ஆர்.சுரேஷ், மாநில இணைப் பொதுச் செயலாளர் பொன்வேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்

    திருச்சி:

    தூத்துக்குடி உமரிக்காட்டில் இந்திய நாடார் பேரவை தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆர்.சுதர்சனுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த விழாவில் இந்திய நாடார் பேரவையினர் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் திரளாக கலந்து கொண்டனர்.

    இதில் மாநில இணை பொதுச்செயலாளர் பொன்வேல், மாநில தலைவர் ஜே.டி.ஆர்.சுரேஷ், தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் தவன்ஜெ,

    மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெகதீஷ் பாண்டியன், மணிகண்டன், பாலன், மகேஷ் மற்றும் துரைமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு நாடார் பேரவை சார்பில் வாழ்த்து மடல் வழங்கி மணமக்களை வாழ்த்தினர்.

    மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்து தெரிவித்து உருவாக்கிய மடலை அவர்கள் மணமக்களிடம் வழங்கினர்.

    Next Story
    ×