என் மலர்
உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

- டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்
- உறையூர் மீன் மார்க்கெட் எதிரே
திருச்சி
திருச்சி குழுமணி ரோடு கோவிந்தசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசகராக இருக்கும் இவர் அப்பகுதி விவசாயிகளுடன் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
திருச்சி குழுமணி ரோடு லிங்கம் நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த பகுதியில் குடிமகன்கள் மது குடித்துவிட்டு பாட்டில்களை விவசாயத் தோட்டத்தில் வீசி செல்கின்றனர். இது நாளடைவில் மண்ணுக்கடியில் புதைந்து விடுகிறது. பின்னர் விவசாய கூலி தொழிலாளிகள் வேளாண் பணியில் ஈடுபடும்போது அந்த பாட்டில்கள் அவர்களின் கால்களை குத்தி கிழிக்கிறது. இது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் உறையூர் மீன் மார்க்கெட் எதிரே ஒரு புதிய டாஸ்மாக் மதுபான கடை திறப்பதாக கிடைத்தது. இதனைத் திறந்தால் மேலும் எங்கள் பகுதியை விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.