என் மலர்
உள்ளூர் செய்திகள்

அல்லித்துறை புனித சவேரியார் ஆலய தேர்பவனி
- அல்லித்துறை புனித சவேரியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது
- கூட்டு திருப்பலியும் மாலை கொடி இறக்கும் நிகழ்ச்சி
திருச்சி:
திருச்சி அருகே உள்ள அல்லித்துறையில் 299 ஆண்டுகளுக்கு முன்பு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வருடாந்திர தேர்பவனி, கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் கோவிலில் பங்குத்தந்தைகளால் திருப்பலி பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நேற்று இரவு சோமரசம்பேட்டை பங்குத்தந்தை அருட்திரு எட்வர்ட் ராஜா திருப்பலியுடன் தொடங்கியது. மாதா, செபஸ்தியார், அருளானந்தர், சூசையப்பர், அந்தோனியார், மைக்கேல்சம்மனசு ஆகிய தெய்வங்கள் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா நடைபெற்று இறுதியாக கோவிலை வந்தடைந்தது.
இவ்விழாவில் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இன்று காலை கூட்டு திருப்பலியும் மாலை கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்