என் மலர்
உள்ளூர் செய்திகள்

துறையூர், முசிறியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

- துறையூர் துணை மின் நிலையத்தில் நாளை 5-ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
- இதனால் கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், கலிங்கமுடையான்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
திருச்சி:
துறையூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
துறையூர் துணை மின் நிலையத்தில் நாளை 5-ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால்,
இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிபட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்மாபட்டி, முத்தையம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, மண்பறை, டி.புதுப்பட்டி, காளிப்பட்டி, சிஎஸ்ஐ, பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், கலிங்கமுடையான்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதைப் போல் முசிறி கோட்டத்தில் முசிறி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், முசிறி சிங்காரச்சோலை புதிய பேருந்து நிலையம், ஹவுசிங் யூனிட் , கைகாட்டி, சந்தபாளையம், அழகாபட்டி, திருச்சி ரோடு, துறையூர் ரோடு, சிலோன் காலனி, தண்டலை புத்தூர், அந்தரப்பட்டி, வேளாகநத்தம், தொப்பலாம்பட்டி, வடுகப்பட்டி, காமாட்சி பட்டி, சிந்தம் பட்டி, கருப்பனாம்பட்டி, அலகரை, மணமேடு சீனிவாசநல்லூர், தும்பலம், சிட்டிலரை, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, திருக்ஈங்கோய் மலை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (5-ந் தேதி) காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என, இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.