என் மலர்
உள்ளூர் செய்திகள்
முத்தரசனை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்த முதல்வர்
திருச்சி,
திருச்சியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு திடீரென காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மிளகுபாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.
ஆனாலும் காய்ச்சல் குறையாததால் திருச்சி அரசு மருத்துவமனையல் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 2 நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதையடுத்து அவர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது.
2 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முத்தரசனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் இன்று அழைத்து நலம் விசாரித்தார்.