என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்ல தடை - மீன்வளத்துறையினர் எச்சரிக்கை
    X

    தூத்துக்குடி மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்ல தடை - மீன்வளத்துறையினர் எச்சரிக்கை

    • தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
    • மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தூத்துக்குடி மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    தூத்துக்குடி:

    மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    வருகிற 8-ந்தேதி தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இதைத்தொடர்ந்த தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் நாளை (புதன்கிழமை) முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தூத்துக்குடி மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்த அறிவிப்பு மாவட்டம் முழுவதும் உள்ள கடலோர கிராமங்களில் மீனவ மக்களிடம் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் விரைவாக கரைக்கு திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    இது தொடர்பாக ஆங்காங்கே ஒலி பெருக்கி மூலமாகவும் மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளன.

    Next Story
    ×