என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின விழா கூடைப்பந்து போட்டியில் தூத்துக்குடி பள்ளி வெற்றி
- திருச்சி தொட்டியம் பகுதியில் உள்ள கல்லூரியில் மாநில அளவிலான குடியரசு தின விழா கூடைப்பந்து போட்டி 3 நாட்கள் நடைபெற்றது.
- வெற்றி பெற்ற செயின்ட் தாமஸ் பள்ளி அணிக்கு பாராட்டு விழா தூத்துக்குடியில் உள்ள பள்ளி வளாகத்தில் நடந்தது.
தூத்துக்குடி:
திருச்சி தொட்டியம் பகுதியில் உள்ள கல்லூரியில் மாநில அளவிலான குடியரசு தின விழா கூடைப்பந்து போட்டி 3 நாட்கள் நடைபெற்றது. பள்ளிகளுக்கு இடையே 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான இந்தப் போட்டியில் 40 பள்ளிகளை சேர்ந்த அணிகள் விளையாடின.
இதில் கலந்து கொண்ட தூத்துக்குடி செயின்ட் தாமஸ் பள்ளி அணி முதல்போட்டியில் நீலகிரி அணியுடன் 50-04 என்ற புள்ளியிலும், ராணிப்பேட்டை அணியுடன் 49-13 புள்ளியிலும், காலிறுதிப் போட்டியில் திருச்சி அணியுடன் 65-32 என்ற புள்ளிகளிலும்,அரை இறுதி போட்டியில் மதுரை அணியுடன் 64 -44 புள்ளிகளிலும்,இறுதிப் போட்டியில் திண்டுக்கல் அணியுடன் 55 -36 என்ற புள்ளிகளுடன் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. மேலும் கலந்து கொண்டஅனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற செயின்ட் தாமஸ் பள்ளி அணிக்கு பாராட்டு விழா தூத்துக்குடியில் உள்ள பள்ளி வளாகத்தில் நடந்தது.இதில் கலந்து கொண்ட தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில் பள்ளியின் தாளாளர் ராயப்பன், முதல்வர் ஆஸ்கர், தொமெசியன் கூடைப்பந்து ஒருங்கிணைப்பாளர் வேல்ராஜ், பயிற்சியாளர் பொன் மாரியப்பன் மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தினேஷ், பாரிஜா எபனேசர், பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.