search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உதயநிதி ஸ்டாலின் வருகை: அரசு விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சக்கரபாணி ஆய்வு
    X

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கலெக்டர் சரயு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் ஒய்.பிரகாஷ், பர்கூர் மதியழகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    உதயநிதி ஸ்டாலின் வருகை: அரசு விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சக்கரபாணி ஆய்வு

    • கிருஷ்ணகிரியில் அரசு விழா ஏற்பாடுகளை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார்.
    • ரூ. லட்சம் 81 செலவில் அமைக்கப்பட்ட குளிர்பதன கிடங்கு திறப்பு நடக்கிறது

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கிருஷ்ண கிரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சி களில் கலந்துக்கொள்ள வருகை தருகிறார்.

    அதனையொட்டி நேற்று விழா முன்னேற்பாடு பணிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, ஓசூர் சட்டமன்ற உறுப்பி னர் பிரகாஷ், (பர்கூர்) மதியழகன் ஆகியோர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கர பாணி தெரிவித்ததாவது:-

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சென்னப்பள்ளி ஊராட்சி யில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பாக ரூ.26 கோடியே 81 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் காய்கறி முதன்மை பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கு கட்டுமான பணிகளையும், மருதாண்டப்பள்ளி சூளகிரி சிப்காட் வளா கத்தில் நவீன மின்வாகன பூங்கா அமையவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.

    தொடர்ந்து வேப்பனப் பள்ளி ஊராட்சி ஒன்றியம், குந்தாரப்பள்ளி குமரன் திருமண மண்டபத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஏ.டி.எம். கார்டு மற்றும் கையேடு களை வழங்க உள்ளார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் அதனை தொடர்ந்து மாவட்ட வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், வாழ்ந்துக் காட்டுவோம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பழங்குடியினர் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் சாதிச்சான்றிதல்கள், நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

    மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறைகள் சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இவ்வாய்வின் போது மாவட்ட கலெக்டர், நேர்முக உதவியாளர் , கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர், வட்டாட் சியர், தனி வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×