என் மலர்
உள்ளூர் செய்திகள்
உத்தனப்பள்ளி அரசு மேல்நிலை பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா
- பிளஸ்-2 மாணவ மாணவியருக்கு அரசு இலவசமாக வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.
- சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி மாவட்ட துணை சேர்மன் ஷேக்ரஷீத் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, ஒசூர் எம்.எல்.ஏ. பிரகாஷ் வழிகாட்டுதலின் படி உத்தனப்பள்ளி அரசுமேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ்-2 மாணவ மாணவியருக்கு அரசு இலவசமாக வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி மாவட்ட துணை சேர்மன் ஷேக்ரஷீத் கலந்து கொண்டு சிறப்புறையாற்றி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் துப்புகாணப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் , தலைவர் கோவிந்தப்பா , ஊர் கவுண்டர் ராஜப்பா, முன்னாள் ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், சூளகிரி தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் .ராமச்சந்திரன் , மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன் , மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராமமூர்த்தி ஒப்பந்ததாரர் சுரேஷ், தலைமை ஆசிரியர் ஜெகதீஷ் ,சுந்தரேஷ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.