search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லக்கில் சென்னிமலை கோவிலுக்கு சென்ற உற்சவ மூர்த்திகள்
    X

    பல்லக்கில் சென்னிமலை கோவிலுக்கு சென்ற உற்சவ மூர்த்திகள்

    • கந்த சஷ்டி தொடக்க விழா நாளன்று சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளை படிக்கட்டுகள் வழியாக மலைக் கோவி லுக்கு அழைத்து செல்வது வழக்கம்.
    • மதியம் 12 மணிக்கு முருகப்பெருமானுக்கு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடை பெற்றது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை தொடங்கியது. கந்த சஷ்டி தொடக்க விழா நாளன்று சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளை படிக்கட்டுகள் வழியாக மலைக் கோவிலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

    இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு உற்ச மூர்த்திகள் புறப்பாடு தொடங்கி படி வழியாக மலை கோவிலை காலை 8.20 மணிக்கு சென்ற டைந்தது.

    கந்தசஷ்டி விழாவின் தொடக்க நாளான இன்று காலை 10 மணிக்கு சென்னிமலை மலைமீது முருகன் கோவி லில் கலச ஸ்தாபனம், யாக சாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது.

    மதியம் 12 மணிக்கு முருகப்பெருமானுக்கு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடை பெற்றது. மயில் வாகன த்திற்கு காப்பு கட்டிய பின்னர் முருகப்பெரு மானுக்கும் காப்பு கட்டப்பட்டது.

    இதை தொடர்ந்து பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோவிலுக்கு முன்பு உள்ள இளைப்பாறும் மண்டபத்தில் பக்தர்களுக்கு கோவிலின் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவசச்சாரியார் காப்பு கட்டினார்.

    இதில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடன் நிறைவேற கைகளில் காப்புக் கட்டிக் கொண்டனர்.காப்புக் கட்டிக் கொண்ட பக்தர்கள் அனைவரும் 6 நாட்களும் விரதம் மேற்கொள்கிறார்கள்.

    தொடக்க நாளான இன்று உள்ளூர்,வெளியூர் மட்டுமின்றி வெளி மாவட்ட ங்களில் இருந்தும் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வந்தனர்.

    கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா வரும் 30 -ந் தேதி இரவு நடக்கிறது. திருக்கல்யாண உற்சவம் 31 ந் தேதி சென்னிமலை டவுன், கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் நடக்கிறது.

    Next Story
    ×