என் மலர்
உள்ளூர் செய்திகள்
வடரெங்கம் ஜம்புகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
- 4-ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.
- மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.
சீர்காழி:
கொள்ளிடம் அருகே வடரெங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்த மான அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் கோயில் உள்ளது.
மிகவும் பழமையான இந்த கோயில் 15 வருடங்களுக்குப் பிறகு திருப்பணி முடிவுற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 8-ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, தன பூஜை,கணபதி ஹோமம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, யாகசாலை பிரவேசம் தொடங்கி முதல் காலயாக பூஜை நடைபெற்றது.
நேற்று 4வது கால யாக பூஜை நிறைவடைந்து பூர்ணாஹூதி, மகாதீபாராதனை நடந்தது.
தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேள,தாளங்கள் முழங்கிட கோயிலை வலம் வந்து மூலவர் விமான கலசம், அகிலா ண்டேஸ்வரி,விநாயகர், முருகன், கஜலட்சுமி, பைரவர் ஆகிய பரிவார மூர்த்திகள் சந்நிதி கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அன்பரசன், ஆய்வாளர் வீரவேல்பிரனேஷ், தக்கார் முருகன், கணக்காளர் ராஜி, ஊராட்சி மன்ற தலைவர் சுமத்ரா சின்னதுரை, தி.மு.க. செயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் சின்னதுரை ஒன்றியக் குழு உறுப்பினர் செந்தாம ரைகண்ணன் பங்கேற்று தரிசனம் செய்தனர்.