என் மலர்
உள்ளூர் செய்திகள்
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் வள்ளி- முருகன் திருக்கல்யாணம்
- யானைக்கு பயந்து வள்ளி முருகனை சந்திப்பதும் அடியார்களால் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.
- வேதமந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு மாங்கல்ய தாரண நிகழ்ச்சி நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை அடுத்த சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளி- முருகன் திருமணம் சிறப்பாக நடந்தது.
இதனை முன்னிட்டு குறவள்ளி முருகனை சந்திப்பதும், அப்போது விநாயகர் பெருமான் யானை ரூபத்தில் வந்து வள்ளியை பயமுறுத்துவதும், பின் முருகனை வள்ளி அடைக்கலமாகி திருமண காட்சி நடைபெறுவதும் நடைபெற்றது.
யானை அழைத்து வரப்பட்டு யானை பிளிருவதும் அதனை அடுத்து யானைக்கு பயந்து வள்ளி முருகனை சந்திப்பதும் அடியார்களால் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு மாங்கல்யதாரணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனை அடுத்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்று, தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.