search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோரணமலை முருகன் கோவிலில் விவசாயம் செழிக்க வேண்டி வருண கலச பூஜை
    X

    சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்ற காட்சி.


    தோரணமலை முருகன் கோவிலில் விவசாயம் செழிக்க வேண்டி வருண கலச பூஜை

    • வருண கலச பூஜை ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.
    • சப்த கன்னியர்கள், விநாயகருக்கும் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

    கடையம்:

    தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன்கோவிலில் மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை மற்றும் வேல் பூஜை ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. புரட்டாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான இன்று காலை பூஜைகள் நடைபெற்றது.

    இதையொட்டி அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கு மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிசேகம், வருண கலச பூஜை , வேல் பூஜை நடைபெற்றது.

    முன்னதாக மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கும் சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை, மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்து இருந்தார்.

    Next Story
    ×