என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
கலசத்திற்கு அபிஷேகம் நடைபெற்றபோது எடுத்த படம்.
புளியங்குடி சொக்கலிங்க சுவாமி கோவில் வருசாபிஷேகம்
By
மாலை மலர்19 March 2023 1:03 PM IST

- வருசாபிஷேகத்தை முன்னிட்டு கும்ப பூஜை, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புளியங்குடி:
புளியங்குடி மீனாட்சி அம்பாள் சொக்கலிங்க சுவாமி கோவில் வருசாபிஷேகம் நடைபெற்றது. வருசாபிஷேகத்தை முன்னிட்டு கும்ப பூஜை, சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பூஜை களை கோவில் அர்ச்சகர் சிவா பட்டர், கண்ணன் பட்டர், முத்துக்குட்டி பட்டர் நடத்தினர். விழாவில் செயல் அலுவலர் ஸ்ரீதேவி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சித்துராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கட்ராமன், உபயதாரர்கள் கணேசன், செல்லத்துரை, செல்வ நாராயணன், பால்ராஜ், மரியதாஸ், வைத்தியலிங்கம் மற்றும் பிரதோஷ கமிட்டி குமார், ஆண்டியப்பன், மகேந்திரன், உதயகுமார், ரமேஷ், முன்னாள் திருப்பணி கமிட்டி ஆவுடையப்பன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
X