என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழாவில் முதல் மாணவர் சேர்க்கையினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்த காட்சி. அருகில் சபாநாயகர் அப்பாவு மற்றும் பலர் உள்ளனர்.
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி திறப்பு விழா
- நிகழ்ச்சிக்கு கல்லூரி குழுமத்தின் நிறுவனர் தொழில் அதிபர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்கினார்.
- சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் எஸ்.ரகுபதி, நீதிபதிகள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது. எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தில் பாலிடெக்னிக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
தற்போது எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரிக்கு மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளது. நேற்று தொடக்க விழா மற்றும் கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி குழுமத்தின் நிறுவனர் தொழில் அதிபர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்கினார். கல்லூரியின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் முன்னிலை வகித்தார்.
சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் பவானி சுப்புராயன், தாரணி மற்றும் பால்தாய் தங்கப்பழம், ரம்யாதேவி முருகேசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
சட்டக் கல்லூரியின் துணை முதல்வர் கலைச் செல்வி வரவேற்றார். சட்ட கல்லூரியினை தமிழக சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
நூலகத்தை ஐகோர்ட் நீதிபதி பவானி சுப்புராயன், மூட் கோர்ட் ஐகோர்ட் நீதிபதி தாரணியும், முதல் மாணவர் சேர்க்கையினை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியும் தொடங்கி வைத்தனர். கல்லூரி கலையரங்கத்தினை தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் திறந்து வைத்தார். நிகழ்ச்சியை வி.எஸ்.ஆர்.ஜெகதீசன் தொகுத்து வழங்கினார்.
தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு, தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, நீதிபதிகள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
திறப்பு விழாவில் நெல்லை மாவட்ட நீதிமன்ற நீதிபதி குமரகுரு, பன்னீர்செல்வம், சிவகிரி நீதிபதி பிரியங்கா, தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், தென்காசி தனுஷ்குமார் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் வாசுதேவநல்லூர் சதன் திருமலைக்குமார், சங்கரன்கோவில் ராஜா, தென்காசி பழனி நாடார், கடையநல்லூர் குட்டியப்பா என்ற கிருஷ்ணமுரளி, ராஜ பாளையம் தங்க பாண்டியன், தென்காசி தெற்கு மாவட்ட செய லாளர் சிவபத்ம நாபன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், துணை சேர்மன் சந்திரமோகன், வாசுதேவநல்லூர் பேரூராட்சித் தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், மகாத்மா காந்தி சேவா சங்கம் தவமணி, சுமங்கலி சமுத்திரவேலு, சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், சிவகிரி நீதிமன்ற அலுவலர்கள், கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சட்டக் கல்லூரியின் பேராசிரியர் சரஸ்வதி நன்றி கூறினார்.