என் மலர்
உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
பண்ருட்டியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வி.சி.க. முற்றுகை

- நகரச்செயலாளர் வக்கீல் கிருஷ்ணராஜ்தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
- கௌதம்,பிரபு, இள சுந்தர்,கவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர்:
பண்ருட்டி பஸ் நிலையம் மற்றும் ெரயில் நிலையம் செல்லும் வழியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிசெல்லும்மாணவ,மாணவியர்களுக்கு இடையூறாக இருந்து வரும் அரசு மதுபான கடையை (டாஸ்மாக்) அகற்றக்கோரி நகரச்செயலாளர் வக்கீல் கிருஷ்ணராஜ்தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இதில் நகர இணை செயலாளர் ராஜி,இளையராஜா,புஷ்பராஜ்,ராஜவேல்,பென்னி,கௌதம்,பிரபு, இள சுந்தர்,கவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புஅழை ப்பாளர்களாக பிரகாஷ்,கலியபெருமாள், அருள்செல்வன் இளஞ்சி றுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பா ளர்வெங்கடசாமி, விவசாய அணி மாநில துணைச் செயலாளர்தமிழ்மாறன் நகர பொருளாளர் பக லவன், வாசன்,சந்தானம்,சவுந்தர், சுப்பு ராய லு,ரமேஷ் ,பிரகாஷ் பாலூர்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.