என் மலர்
உள்ளூர் செய்திகள்
வேலூர் அடுத்த லட்சுமிபுரம் கைலாயநாதர் கோவிலில் 1008 சகஸ்ர தீபம் ஏற்றி வழிபாடு
அணைக்கட்டு:
கத்தாழம்பட்டு அடுத்த லட்சுமியுரம் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் 1008 சகஸ்ர தீபம் ஏற்றி 108 சங்காபிஷேகம் செய்து கார்த்திகை கடைசி சோமவார விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனையடுத்து நள்ளிரவில் 16 கோபூஜைகள் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், கத்தாழம்பட்டு அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை கடைசி சோமவார விழா நேற்று இரவு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுவாமிக்கு முதலில் ருத்ராபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 108 சங்காபிஷேகமும் 1008 சகஸ்ர தீபங்கள் ஏற்றியும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது.
கால்நடைகள் நோய் வராமல் இருக்கவும் அப்பகுதி இருக்கும் அணைத்து பசுக்களையும் ஆலயத்திற்க்கு அழைத்து வந்து நள்ளிரவில் கோபூஜை சிறப்பாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சுற்றுப்பகுதியில் இருந்து சுமார் 1000 க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கார்த்திகை கடைசி சோமவார விழாவிலும் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் கைலா சநாதரை வழிபட்டனர்.
இதனைய டுத்து அனை வருக்கும் கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்ப ட்டது.