என் மலர்
உள்ளூர் செய்திகள்
லாரி மீது பைக் மோதி 2 மாணவர்கள் பலி
வேலூர்:
திருவலம் அடுத்த குப்பிரெட்டிதாங்கல் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபிநாத் மகன் அஜய்கீர்த்தி (வயது 20). ஐ.டி.ஐ. படித்து வந்தார். அதேபகுதியை சேர்ந்தவர் ராமன் மகன் ராஜசேகர் (28).
நண்பர்களான அஜய்கீர்த்தி, ராஜசேகர் ஆகியோர் நேற்று பைக்கில் சென்னை- பெங்களூரு சாலையில் சென்றனர். மேல்மொணவூர் அருகே சென்றபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பைக் மோதியது.
இதில் பைக் சேதமடைந்து லாரியின் அடிப்பகுதியில் சிக்கிக்கொண்டது.
அஜய்கீர்த்தி, ராஜசேகர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சிறிது நேரத்தில் அஜய்கீர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜ சேகரை பொது மக்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.