என் மலர்
உள்ளூர் செய்திகள்
காப்புகாட்டில் மழைநீர் பள்ளத்தில் ஆனந்த குளியல் போட்ட காட்டு யானை
- வன பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல தடை
- வனத்துறையினர் எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கோட்டையூர் கிராமம் அருகே மோர்தனா விரிவு காப்புக்காடு உள்ளது. இந்த வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க வனத்துறையினர் ஆங்காங்கே பல இடங்களில் நீர்த்தேக்க பள்ளங்களை தோண்டி உள்ளனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி உள்ளது.
தற்போது பள்ளங்களில் தேங்கிய தண்ணீரை வனவிலங்குகள் குடித்துவிட்டு செல்கி ன்றனர். இதில் தண்ணீர் குடிப்பதற்காக காட்டு யானை ஒன்று வந்தது. தண்ணீரைக் குடித்துவிட்டு, மழைநீர் தேங்கியுள்ள பள்ளத்தில் இறங்கி ஆனந்த குளியல் போட்டது.
யானை தண்ணீரில் குதித்து விளையாடும் வீடியோ காட்சிகள், வனத்துறையினர் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிருந்தன.
எனவே பேரணாம்பட்டு மற்றும் அதை சுற்றி உள்ள வனப்பகுதிக்குள் பொதுமக்கள் காப்பு காட்டிற்குள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள்யாரும் காப்புக்காட்டு பகுதியில் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.