என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
தந்தை பெரியார் பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுக்கு பிறகு சந்திப்பு
Byமாலை மலர்29 Jan 2023 3:17 PM IST
- வெள்ளி விழாவையொட்டி கலாசார திருவிழாவாக கொண்டாடினர்
- கண்காணிப்பு கேமரா வழங்கப்பட்டது
வேலூர்:
வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 1995 முதல் 98-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் ஆறுமுக முதலி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மேகலா முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் விஐபி பாதுகாப்பு போலீஸ் அதிகாரியமான தயாளன் மற்றும் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளி விழாவையொட்டி கலாசார திருவிழாவாக கொண்டாடப்பட்டது. 1970-ம் ஆண்டு முதல் பாலிடெக்னிக்கில் படித்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சால்வை அணிவித்தும் நினைவு பரிசுகள் வழங்கியும் கவுரவிக்கப்பட்டனர்.
மேலும் கல்லூரிக்கு நிதியுதவி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
Next Story
×
X