என் மலர்
உள்ளூர் செய்திகள்

கட்டிடமேஸ்திரி தீக்குளிக்க முயற்சி
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர்.
காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் வெங்கடேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி பிரபு (வயது 40) என்பவர் அவரது தாயார் முனியம்மாள் என்பவருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
தீக்குளிக்க முயற்சி
மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்து கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கம் முன்பு பிரபு திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனை கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி பின்னர் அவரது உடலில் தண்ணீரை ஊற்றி சமாதானம் செய்தனர். சொத்து தகராறில் அவர் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்மவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. லதா சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில் பள்ளிக்குப்பம், கொல்லமங்கலம், சின்னசேரி, அகரம் சேரி, கூத்தம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.இந்த ஊராட்சிகளை திருப்பத்தூர் மாவட்டத்தில் இணைக்க கூடாது.
அந்த பகுதி திருப்பத்தூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டால் மாவட்ட தலைநகரத்திற்கு 60 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இந்த ஊராட்சிகளை மையப்படுத்தி அகரம் சேரி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதே போல அ. கட்டுப்படி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் தங்கள் கிராமத்தின் அடையாளமாக கட்டுபடி கூட்ரோட்டில் அனைத்து மதத்தினரையும் மதிக்கும் வகையில் இருந்த நுழைவு வாயில் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது.
மீண்டும் அந்த பகுதியில் நுழைவாயில் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.