என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ஆந்திர எல்லை சோதனை சாவடியில் டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு ஆந்திர எல்லை சோதனை சாவடியில் டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு](https://media.maalaimalar.com/h-upload/2023/03/26/1855613-1628819-1vellore.webp)
காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை சோதனை சாவடியில் டி.ஐ.ஜி முத்துசாமி ஆய்வு செய்த காட்சி.
ஆந்திர எல்லை சோதனை சாவடியில் டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டினார்
- ரெயில் பயணிகளின் உடமைகள் சோதனை
வேலூர்:
தமிழக -ஆந்திர எல்லையான கிறிஸ்டியான் பேட்டையில் சோதனை சாவடி உள்ளது. ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா, செம்மரகட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தப்படுகிறது. இதனை தடுக்க போலீசார் பகல், இரவு என 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், காட்பாடி டிஎஸ்பி பழனி மற்றும் போலீசார் கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் திடீர் சோதனை நடத்தினர். ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தார். பின்னர் வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
இதனையடுத்து காட்பாடி ரெயில் நிலையத்திலும், அந்த வழியாக வந்த ரெயில்களிலும் போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.