என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![வேலூரில் ஆயுத பூஜை சிறப்பு பஸ்கள் இயக்கம் வேலூரில் ஆயுத பூஜை சிறப்பு பஸ்கள் இயக்கம்](https://media.maalaimalar.com/h-upload/2023/10/20/1969605--.webp)
கோப்புப்படம்
வேலூரில் ஆயுத பூஜை சிறப்பு பஸ்கள் இயக்கம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பெங்களூருக்கு -5, திருச்சிக்கு - 5 என இயக்கப்பட உள்ளது
- சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தகவல்
வேலூர்:
ஆயூதபூஜை விஜயதசமி முன்னிட்டு தொடர் அரசு விடுமுறை என்பதால் பொது மக்கள் வசதிக்காக சென்னை பூந்தமல்லி தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன.
வேலூருக்கு-50 பஸ்கள், ஆற்காடு 10 பஸ்கள், ஓசூர்- 10 பஸ்கள், தர்மபுரி- 5 பஸ்கள், குடியாத்தம்-10, திருப்பத்தூர்-20 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
அதேப்போல் வேலூரிலிருந்து பெங்களூருக்கு -5 பஸ்கள், திருச்சிக்கு - 5 பஸ்கள் என இயக்கப்பட உள்ளது.
மேலும் வருகின்ற 24 மற்றும் 25-ந்தேதிகளில் பொதுமக்கள் சென்னை, தாம்பரம் மற்றும் பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு திரும்பி செல்வதற்கு ஏதுவாக வேலூரிலிருந்து, சென்னை, தாம்பரம் மற்றும் பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு வழக்கமாக செல்லும் பஸ்கள் தவிர்த்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
பொது மக்கள் இந்த சிறப்பு பேருந்து சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.