என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் பாலாற்றில் என்சிசி மாணவர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் குப்பைகளை அகற்றிய காட்சி.
வேலூர் பாலாற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்

- எ.ன்.சி.சி. மாணர்கள் சுத்தம் செய்தனர்
- தினமும் 20 லட்சம் லிட்டர் குப்பை கழிவு நீர் கலக்கும் அவலம்
வேலூர்:
வேலூர் மாநகரில் இருந்து நாள்தோறும் 20 லட்சம் லிட்டர் குப்பை கலந்த கழிவுநீர் பாலாற்றில் கலக்கிறது. பாலாற்றுப் பகுதியில் தினந்தோறும் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் கொட்டப்படுகிறது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு பாலாறு உயிர்த்தெழுந்து தண்ணீர் பாய்ந்து ஓடி வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீரிலும் அதிக அளவில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் அடித்து வரப்படுகின்றன.
வேலூர் பாலாற்றில் இன்று காலை என்சிசி மாணவ மாணவிகளின் மூலம் குப்பை மற்றும் பிளாஸ்டிக் சுத்தம் செய்யும் பணி நடந்தது.
பாலாற்றில் புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் 10 வது பட்டாலியன் என்சிசி மாணவர்கள் மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இணைந்து பாலாற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.
தேசிய மாணவர் படை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் உடன் இருந்தனர்.