என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்டு

- பயணிகளை மழையில் இறக்கி விட்டதால் நடவடிக்கை
- வேலூர் மண்டல பொது மேலாளர் உத்தரவு
பேரணாம்பட்டு:
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடந்த 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டு பேரணாம்பட்டுக்கு சென்றது.
அந்த பஸ்சின் டிரைவர் வெங்கடேசனும், கண்டக்டர் சத்திய நாராயணனும் பயணிகளை பேரணாம்பட்டு பஸ் நிலையத்தில் இறக்கி விடாமல் கொட்டும் மழையில் 1.5 கிலோமீட்டர் முன்பாக புத்துக்கோவில் சந்திப்பு சாலையில் இறக்கி விட்டு சென்றனர்.
மேலும் பஸ்சில் தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பாமல் அவரையும் டிப்போவில் விட்டு சென்றனர். இந்த சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவலறிந்த வேலூர் மண்டல பொது மேலாளர் கணபதி, பேரணாம்பட்டு கிளை மேலாளர் ரமேஷை விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார்.
விசாரணையில் பயணிகளை நடுரோட்டில் இறக்கி விடப்பட்ட சம்பவம் உறுதியானது. இதனையடுத்து நேற்றிரவு அரசு பஸ் டிரைவர் வெங்கடேசன், கண்டக்டர் சத்திய நாராயணன், டெப்போ செக்யூரிட்டி கவுதமன் ஆகிய 3 பேரை சஸ்பெண்டு செய்து வேலூர் மண்டல பொது மேலாளர் கணபதி உத்தரவிட்டுள்ளார்.