என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்த காட்சி.
அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முற்றுகை

- ஓய்வு கால பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தல்
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
வேலூர்:
சி.ஐ.டி.யு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் ரங்காபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் இன்று நடந்தது.
மாவட்ட செயலாளர் பரசுராமன், பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினா்.
ஒப்பந்த நிலுவைத் தொகை, கொரோனா நிதி வழங்க வேண்டும்.அடிப்படை சம்பளத்தை சரி செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஒப்பந்த பலனை வழங்கி, ஓய்வூதிய உயர்வு, பணி ஓய்வு பெற்ற, மரணமடைந்த தொழிலாளர்களின் ஓய்வு கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட தலைவர் இளங்கோ, துணை பொது செயலாளர் சுரேஷ், பொருளாளர் சிரஞ்சீவி, துணைத்தலைவர் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முற்றுகை போராட்டத்தையொட்டி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.