search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கணவன் - மனைவி தீக்குளிக்க முயற்சி
    X

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கணவன் - மனைவி தீக்குளிக்க முயற்சி

    • முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது
    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காளாம்பட்டு அடுத்த வங்கடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 48). இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டெக்னீசியனாக வேலை செய்து வருகிறார்.

    இவருக்கு அதே பகுதியில் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இது தொடர்பாக கோவிந்தராஜ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கு பிரச்சினை தொடர்பாக வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இவருக்கு சொந்தமான இடத்தை எதிர் தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கோவிந்தராஜ் கலெக்டர், வேலூர் போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை எந்தெந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கோவிந்தராஜ் தனது மனைவி நதியாவுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்தார்.

    அலுவலக வாசலில் கணவன்- மனைவி 2 பேரும் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ குளிக்க முயற்சி செய்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி விசாரணை நடத்தினார். அதிகாரிகள் கணவன்- மனைவி 2 பேரையும் இது நிலம் சம்பந்தமான புகார் என்பதால், அவர்களை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×