என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி ஆஸ்பத்திரியில் கருத்தரிப்பு மையம் திறப்பு வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி ஆஸ்பத்திரியில் கருத்தரிப்பு மையம் திறப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/04/15/1866337-1665045-1vellore.webp)
வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் கருத்தரிப்பு மையத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அருகில் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் கீதா ராணி.
வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி ஆஸ்பத்திரியில் கருத்தரிப்பு மையம் திறப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- குறைந்த செலவில் செய்வதற்கு பாராட்டு தெரிவித்தார்
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூர் நாராயணி ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிய கருத்தரிப்பு மையம் திறப்பு விழா இன்று நடந்தது.
ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் கீதா ராணி வரவேற்புரை ஆற்றினார். நாராயணி மருத்துவ மனை இயக்குனர் டாக்டர் பாலாஜி தலைமை தாங்கி பேசியதாவது, இந்த கருத்தரிப்பு மையத்திற்கு வரும் ஏழை எளிய பெண்களுக்கு மாதத்திற்கு 4 முதல் 5 பேருக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்படும் என்றார். சிறப்பு விருந்தினராக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி கருத்தரிப்பு மையத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
உணவு பழக்க வழக்கம் காலநிலை மாற்றம் மற்றும் காற்று மாசு காரணமாக பெண்களுக்கு குழந்தையின்மை ஏற்படுகிறது.
குழந்தையின்மைக்கு பெண்கள் மட்டும் காரணம் இல்லை ஆண்களும் தான். குழந்தையின்மையினால் கணவர் மனைவியை விவாகரத்து செய்வது, கொடுமைப்படுத்துவது, உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் ஏளனமாக பேசுவது உள்ளிட்டவை நடக்கிறது.
மேலும் குழந்தை இல்லாத பெண்களின் கணவர்கள் 2-வது திருமணம் செய்து கொள்கின்றனர். ஒருபுறம் குழந்தை இல்லாததால் பெண்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
மறுபுறம் குழந்தையை பெற்ற தாய்மார்கள் குழந்தையை சாலை ஓரங்களில் வீசி செல்லும் கொடுமை நடந்து வருகிறது.
குழந்தை வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கின்றனர். குழந்தையின்மைக்கு தற்போது மருத்துவ உலகில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் பெண்களுக்கு கருத்தரிப்பு செய்கின்றனர். இந்த மையத்தில் குறைந்த செலவில் கருத்தரிப்பு செய்வது பாராட்டத்திற்குரியது என்றார்.