என் மலர்
உள்ளூர் செய்திகள்

காட்பாடியில் வடமாநில வாலிபர் மர்ம சாவு
வேலூர்:
காட்பாடி விருதம்பட்டு மாணிக்கம் விநாயகர் கோவில் தெருவில் இன்று அதிகாலை வடமாநில வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதனைக் கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் வாலிபர் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வட மாநில வாலிபர் யார்? எதற்காக காட்பாடி வந்திருந்தார் என்பது தெரியவில்லை. அவர் யார்? எப்படி இறந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்து கிடந்த வட மாநில வாலிபர் நேற்று இரவு மதுபோதையில் அந்த பகுதியில் சுற்றி திரிந்ததாகவும் அங்குள்ள வீட்டுக்குள் நுழைய முயன்றதாகவும் அந்த பகுதி பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.