என் மலர்
உள்ளூர் செய்திகள்
புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில் தேரோட்டம்
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவிலில் இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது தேரோட்டத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பேரில் வைத்து எழுந்தருளினார்.
இதேபோல் குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டி காளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அலங்கா ரங்களும் பூஜை களும் செய்யப்பட்டது தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்ப ட்டு தேரில் எழுந்தருளினார்.
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தர ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இரு தேரோட்ட நிகழ்ச்சி களிலும் ஆயிரக்கண பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இரு இடங்களில் நடந்த தேர் திருவிழாவில் குடியாத்தம் புதுப்பேட்டை, பிச்சனூர், காளியம்மன பட்டி, சாமியார்மலை உள்ளிட்ட பகுதிகளில் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.
தெருக்களில் வண்ண விளக்கு களால் அலங்கரி க்கப்பட்டு பல இடங்களில் அன்னதான மும் தண்ணீர் பந்தலும் அமைக்க ப்பட்டுள்ளது.
காளியம்மன் கோவில் தேரோட்டத்திற்கு அப்பகுதி இளைஞர்கள் சார்பில் ராட்சதமாலைகள் டிராக்டரில் வைத்தும் பொக்லைன் எந்திரத்தில் வைத்தும் கொண்டு வந்து அம்மனுக்கு அணிவித்தனர்.
இரு நிகழ்ச்சிகளிலும் கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, கோவில் அறங்காவலர் குழு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள், விழா குழுவினர், திருப்பணி கமிட்டியினர், நகர மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அரசு, அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராம மூர்த்தி மேற்பார்வையில் டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.