search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் பெய்த கன மழையால் குடியிருப்புகளுக்குள் வெள்ளம்
    X

    வேலூர் சத்துவாச்சாரியில் இருந்து புதிய பஸ்நிலையத்திற்கு செல்லும் சர்வீஸ் ரோட்டில் தேங்கிய மழை வெள்ளத்தில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்.

    வேலூரில் பெய்த கன மழையால் குடியிருப்புகளுக்குள் வெள்ளம்

    • குடியாத்தம், அணைக்கட்டு சாலையில் மரங்கள் சாய்ந்தன
    • தெருக்கள் சேரும் சகதியுமாக மாறியது

    ராணிப்பேட்டை:

    வேலூரில் பரவலாக மழை பெய்தது‌.

    பரவலாக மழை

    வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று இரவு 7 மணி அளவில் இடி மின்னலுடன் மழை பெய்தது.

    வேலூர், காட்பாடி, திருவலம், அணைக்கட்டு, குடியாத்தம், பள்ளி கொண்டா உள்ளிட்ட பகுதிகளின் பலத்த மழை பெய்து.இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. அணைக்கட்டு மற்றும் குடியாத்தம் சாலையில் சாலையோரம் இருந்த 2 புளியமரங்கள் நடு ரோட்டில் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக சாலையில் விழுந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

    வேலூர் அம்பேத்கர் நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன. மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றினர்.

    வேலூர் கன்சால்பேட்டை, சமத்நகர், பர்மா காலனி, வசந்தபுரம், இந்திரா நகர், முள்ளிப்பாளையம், திடீர் நகர் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வரும் பகுதிகளில் தெருக்கள் சேரும் சகதியுமாக மாறியது. அந்த பகுதி வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    Next Story
    ×