என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை மலையில் உள்ள வெள்ளாண்டப்பன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்த காட்சி.
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

- புரட்டாசி 3-வது சனிக்கிழமையொட்டி ஏற்பாடு
- வெள்ளாண்டப்பன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
வேலூர்:
புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு திருமஞ்சன அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பி க்கப்பட்டது.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை, திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள பெருமாள் கோவில், காட்பாடி சாலையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேச பெருமாள், மெயின் பஜாரில் உள்ள வெங்கடேச பெருமாள், பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில், வேலப்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டி ருந்தன.
கீழ்அரசம்பட்டு அருகே உள்ள சிங்கிரிகோவில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் அதிகாலை மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மபுரம்
பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலையில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
பெரு மாளுக்கு மலர்களாலும், வெள்ளி கவசத்தாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டி ருந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை மலை கிராமத்தில் உள்ள வெள்ளாண்டப்பனுக்கு சிறப்பா அபிஷேகம், ஆராதனை மற்றும் தீபா ரதனை காண்பிக்கப்பட்டது. விடியற்காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 30 கிலோமீட்டர் நடந்து சென்று, பொரி, கடலை, சர்க்கரை பொங்கலுடன் சாமிக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர்.
மேலும் பக்தர்கள் மொட்டையடித்தும், குழந்தை வரம் வேண்டி அங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டியும், திருமணம் வரம் வேண்டி தாலிக்கயிறு கட்டியும், வேலை வேண்டி கோரிக்கை அடங்கிய பேப்பரை மரத்தில் கட்டி வேண்டினர்.