என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு](https://media.maalaimalar.com/h-upload/2023/09/03/1943598--.webp)
X
ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு
வேலூர்:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது 19), கல்லூரி மாணவன். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரெட்டிமாங்குப்பம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார். ஏரியில் குளிக்கும்போது அஜித்குமார் திடீரென மூச்சுத்திணறி தண்ணீரில் மூழ்கினார். உடனே, அவரது நண்பர்கள் தண்ணீரில் தேடிப் பார்த்தும் அஜித்குமார் கிடைக்கவில்லை.
இதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக, விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் ஏரியில் மூழ்கிய அஜித் குமாரின் சடலத்தை சுமார் 4 மணி நேரம் போராடி மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேல்பட்டி போலீசார் அஜித் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X