என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்
- கல்குவாரி மூட வலியுறுத்தல்
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை
வேலூர்:
வேலூர் அடுத்த பெருமுகை கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது.இதனை அப்பகுதி மக்கள் புறக்கணித்தனர்.
இதில் கலந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டும் கூட்டம் நடந்த இடத்தில் இருந்தனர்.
கடந்த முறை கிராம சபை கூட்டம் நடந்தபோது பெருமுகை கல் குவாரியை மூட வேண்டும், மக்கள் வசிக்கும் பகுதியில் தொழிற்சாலை அமைத்து கனரக வாகனங்கள் இயக்குவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றபட்டன.
ஆனால் இதுவரை கல்குவாரி மூடப்படவில்லை. வாகனங்கள் அந்த பகுதி வழியாக செல்வது நிறுத்தப்படவில்லை.
ஊராட்சியின் வரவு செலவு கணக்கை கேட்டதற்க்கு இதுவரை உரிய பதில் அளிக்கவில்லை என்பதால் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Next Story