என் மலர்
உள்ளூர் செய்திகள்

சி.சி.டி.வி. கேமராவில் பதிவான கொள்ளையர்கள் உருவம்.
வேன் டிரைவர் வீட்டில் நகை, ரூ.1.50 லட்சம் கொள்ளை
- வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்
- சி.சி.டி.வி. ேகமராவில் கொள்ளையர்களின் உருவம் சிக்கியது
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா அடுத்த சராதிப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மனோகர்(வயது65). குடியாத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி ஆதிலட்சுமி (வயது50). தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.
இவர்களின் ஒரே மகன் மோகன்ராஜ். மாற்று திறனாளியான இவர் கரடிகுடி பகுதியில் செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகின்றார்.
மனோகர் மற்றும் அவரது மனைவி மகன் என 3 பேரும் தினமும் காலை 7.30 மணிக்குள்ளாக பணிக்கு சென்று விட்டு, இரவு தான் வீடு திரும்புவார்களாம்.
ேநற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு மோகன்ராஜ் தனது கடையிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பூட்டி இருந்த கேட் திறந்து உள்ளே போன மோகன்ராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சிய டைந்துள்ளார்.
மேலும், உள்ளே சென்று அறையில் இருந்த 2 பீரோக்களில் பார்த்தபோது அதில் இருந்த துணிகள், பொருட்கள் எல்லாம் அறை முழுவதும் சிதறிக்கிடந்துள்ளது.
மேலும் பீரோவில் வைத்து இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. உடனடியாக மோகன்ராஜ தனது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார். தொடர்ந்து பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, வீட்டின் வெளிப்புற பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து பார்த்தனர்.
இதில் 2 பேர் வீட்டின் காம்பவுன்ட் சுவர் ஏறி குதித்து கதவின் பூட்டை உடைத்து உள்ளே செல்வது பதிவாகியிருந்தது. ஆனால் மறுபடியும் வெளியே வரும் காட்சிகள் பதிவாகவில்லை.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.